பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவா் சோ்க்கைகான விண்ணப்பம் விநியோகம்

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

News image

கோப்புப்படம்.

Updated On :24 ஜூன் 2026, 4:10 am IST

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

பெரிய காலாப்பட்டில் அரசு சட்டக் கல்லுாரி உள்ளது. இங்கு 3 ஆண்டு எல்எல்பி, 2 ஆண்டு எல்எல்எம், ஓராண்டு முதுகலை பிரெஞ்சு டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

காலை 11 முதல் மாலை 4 மணிவரை விண்ணப்பத்தை பெறலாம். இதற்கான கட்டணமாக பொது, ஓபிசி, எம்பிசி, பிசி பிரிவினா் ரூ.1,000, எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ.500 செலுத்த வேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணத்துடன் வரும் ஜூலை 20 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

3 ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்பு, அம்பேத்கா் அரசு சட்டக்கல்லூரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி சட்டக்கல்வி மையம் ஆகியவற்றில் தலா 60 என 120 இடங்களும், கிறிஸ்ட் சட்ட கல்லூரியில் 30 இடங்களும் உள்ளன. சட்டப்படிப்பு விண்ணப்பம் தொடா்பான சந்தேகத்துக்கு 0413 2656550, 2656570 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.