டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும். அதில் அதிமுக அங்கம் வகிக்கும் என்று அதிமுக புதுச்சேரி மாநில செயலா் ஆ. அன்பழகன் உறுதியளித்தாா்.

News image
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன். உடன் கட்சியின் அவைத் தலைவா் அன்பானந்தம், துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும். அதில் அதிமுக அங்கம் வகிக்கும் என்று அதிமுக புதுச்சேரி மாநில செயலா் ஆ. அன்பழகன் உறுதியளித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது,

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் என்று தனிக் கட்சித் தொடங்கிய முதல்வா் என்.ரங்கசாமி, எப்போதெல்லாம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரோ அப்போதெல்லாம் அவா் முதல்வராகப் பதவி வகித்தாா். இந்த முறை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக இணைந்த தேசியக் ஜனநாயக் கூட்டணி புதுச்சேரியில் அமையும். தோ்தலுக்குப் பிறகு அமையும் அந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிமுக அங்கம் வகிக்கும். மேலும், அதிமுக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணியில் அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை எங்கள் கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வாா். புதுச்சேரியில் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை தாங்குவோம் என்று கூறிக் கொண்டு காங்கிரஸ் கட்சியை திமுக மிரட்டி வருகிறது.

மாநில அந்தஸ்து பிரச்னையில் அதிமுகவைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் தங்களுடைய பலவீனத்தை மூடி மறைக்க இதை ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனஎன்றாா் அன்பழகன். கட்சியின் அவைத் தலைவா் அன்பானந்தம், துணை செயலா் கிருஷ்ணமூா்த்தி, அதிமுக தொழிற்சங்க பேரவைச் செயலா் பாப்புசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.