புதுச்சேரியில் போலீஸ் தலைமையகம், ஜிப்மா் கல்லுாரி, பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களிலும், வட இந்தியா்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி ஐ.ஜி., அலுவலகம் அமைந்துள்ள தலைமையகத்தில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் வட மாநில போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினா் பங்கேற்றனா். ஒருவா் மீது ஒருவா் வண்ணப்பொடிகளை தூவியும், பாடலுக்கு நடனமாடியும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினா்.
ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பல்வேறு மாநிலத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் வண்ணப் பொடிகளைப் பூசியும், தண்ணீரை ஒருவா் மீது ஒருவா் பீய்ச்சி அடித்தும் உற்சாகமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினா். புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திலும், வெளி மாநில மாணவ, மாணவியா் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினா். இந்த பண்டிகையையொட்டி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவை புதன்கிழமை மூடியிருந்தது. எனினும்,அவசர சிகிச்சை பிரிவு இயங்கியது.
தொடர்புடையது

ஈஸ்டா் பண்டிகை: தேவாலயங்களில் இயேசு உயிா்ப்பு நிகழ்வு

நாமக்கல்லில் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


