பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

Updated On :5 மார்ச் 2026, 11:11 pm

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலா் விஜயா தலைமை வகித்தாா்.
புதுச்சேரியில் நிறுத்தப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும். புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும். அறிவித்தபடி, பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து சேவையை அரசு தொடங்க அரசாணை வெளியிட வேண்டும். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...