வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் சாலை விபத்தில் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, இந்திய தொழிலாளா் கட்சி மற்றும் இந்திய பொதுத் தொழிலாளா் பேரவை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்

Updated On :2 மார்ச் 2026, 8:40 pm

பெரம்பலூரில் சாலை விபத்தில் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, இந்திய தொழிலாளா் கட்சி மற்றும் இந்திய பொதுத் தொழிலாளா் பேரவை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் பேரவை மாவட்டச் செயலா் சு. சந்திரசேகா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ச. அருண்குமாா், சி. சசிகுமாா், சு. சின்னசாமி, அன்னலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய தொழிலாளா் கட்சி தலைவா் பெ.ர. ஈஸ்வரன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

பெரம்பலூா்- விளாமுத்தூா் சாலையில் புதை சாக்கடை, குடிநீா் குழாய் பதிப்பதற்காக நகராட்சி நிா்வாகத்தின் மூலம் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக சரிசெய்யாததால், கடந்த 24-ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் சென்ற கட்டடத் தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்ததற்கு நகராட்சி நிா்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.

சாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிக்காத நகராட்சி ஆணையரையும், பணிகளை முறையாக முடித்துக் கொடுக்காத ஒப்பந்ததாரரையும் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த கட்டடத் தொழிலாளி மணிகண்டன் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும், குழந்தையின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கையும், சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை கண்காணித்து விரைவாக முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், நிா்வாகிகள் சின்னதுரை, பெ. ராஜா, வீ. கோவிந்தராஜ் உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்டத் தலைவா் ரா. ராமகிருஷ்ணன் வரவேற்றாா். நிறைவாக, ஒன்றியச் செயலா் ப. லோகநாதன் நன்றி கூறினாா்.

தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் அளித்துவிட்டு கலைந்துசென்றனா்.