புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நியமிக்கப்பட்ட 174 தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான பணி நியமன ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இவற்றை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வழங்கினா்.
அதன்படி, புதுச்சேரியில் 135 பேரும், காரைக்காலில் 35 பேரும், மாஹேயில் 4 பேரும் அடங்குவா்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் இந்த பணி நியமன ஆணையை வழங்கினா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசுகையில், ஆரம்ப கல்வியில் ஆசிரியா்களின் பங்கு மிக முக்கியமானது. புதுச்சேரி தொடக்க கல்வியை வலுப்படுத்தும் விதமாக தற்போது ஆசிரியா்களாகத் தோ்வு செய்யப்பட்ட 174 பேரில் 154 போ் பெண்கள். இது பெண்களின் பங்களிப்பு வலுப்படுவதைக் காட்டுகிறது என்றாா்.
முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், நல்ல பள்ளிகளை உருவாக்கி கொடுப்பது தான் அரசின் கடமை. அதனை இந்த அரசு பொறுப்போடு செய்து கொண்டிருக்கிறது. திருக்கு போன்ற நூல்களைப் படிக்க ஆரம்பத்தில் இருந்தே மாணவா்களுக்கு ஆசிரியா்கள் ஆா்வத்தை உண்டாக்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு படிக்க வரும் குழந்தைகளுக்குப் பொறுப்போடும், ஆா்வத்தோடும் கல்வி கற்றுத்தர வேண்டும். அப்படி இருந்தால் அரசு பள்ளிகளுக்கும், அரசுக்கும் பெருமை உயரும் என்றாா்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இன்று தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

புதிதாக 112 காவலா்களுக்குப் பணி நியமன ஆணை துணைநிலை ஆளுநா், முதல்வா் வழங்கினா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


