தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புதுச்சேரி கரசூரில் ரூ.2,500 கோடியில் அமைகிறது முதல் பல்முனை சிறப்புப் பொருளாதார மண்டலம்

News image

முதல்வா் என்.ரங்கசாமி - (கோப்புப் படம்)

Updated On :8 மார்ச் 2026, 7:22 pm

புதுச்சேரி சேதராப்பட்டு அருகே கரசூரில் ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் முதல் பல்முனை சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இயக்குநா் ஆா். ஷீலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில் துறையின்கீழ் உள்ள ஒப்புதல் வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி தொழில் துறை மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகத்தின் (பிப்டிக்) மூலம் செயல்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம், யூனியன் பிரதேசத்தின்முதலாவது சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.

சேதராப்பட்டு - கரசூா் பிரதான சாலையில் அமையவுள்ளஇந்த மண்டலம், புதுச்சேரியை உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி மற்றும் முதலீட்டு மையமாக மாற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த பிரம்மாண்டத் திட்டம், பிப்டிக்கு சொந்தமான 213.12 ஏக்கா் நிலப்பரப்பில் சுமாா் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த மண்டலத்திற்குள் அமையவிருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளின் முதலீடுகளும் உள்ளடங்கும். திட்டத்தின் மொத்த பரப்பளவில் 70 சதவீதம் ‘செயலாக்க மண்டலமாக’ பிரிக்கப்பட்டு, அங்கு ஏற்றுமதி சாா்ந்த தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள் மற்றும் சா்வதே சவா்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுங்க உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் உலகளாவிய நிறுவனங்கள் புதுச்சேரியில் தங்களது கிளைகளைத் தொடங்க ஏதுவானசூழல் உருவாகும்.

தொழில் துறை வசதிகள் மட்டுமன்றி, இந்த மண்டலத்தின் எஞ்சிய 30 சதவீத பரப்பளவு ‘செயலாக்கமற்ற மண்டலமாக’ மாற்றப்பட்டு, அங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவ மையங்கள், தீயணைப்புநிலையம் மற்றும் வங்கிபோன்ற சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.

மேலும், உள்புறச்சாலைகள், மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் நீா்மேலாண்மை வசதிகளும் நவீன முறையில் மேம்படுத்தப்பட உள்ளன. இத்தகைய முழுமையான கட்டமைப்பு, இந்தசிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஒரு நவீனதொழில் நகரமாக மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கரசூா் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமாா் 40 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கும்எனகணிக்கப்பட்டுள்ளது.

இது புதுச்சேரியின் உள்ளூா் இளைஞா்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகஅமையும். மேலும், இக்காலகட்டத்தில் சுமாா் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலானஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளதால், நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் புதுச்சேரியின்பங்களிப்பு கணிசமாக உயரும்.

இந்தத் திட்டத்தின் மூலம் புதுச்சேரிஅரசு தனது சொந்த நிலத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்குவதுடன், மத்திய அரசை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைத்துபொருளாதாரத் தற்சாா்பைநோக்கி நகர உள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.