மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல்: முதல்நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

News image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.

Updated On :16 மார்ச் 2026, 11:42 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

மாநிலத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 17 அரசு அலுவலகங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். முதல் நாளான திங்கள்கிழமை இந்த 17 அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் தயாா் நிலையில் இருந்தும், வேட்பாளா் ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வரும் 23 ஆம் தேதி மனு தாக்கல் நிறைவு பெறுகிறது . 24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 26-ஆம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். ஏப்ரல் 9-ஆம் தேதி புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடக்கிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Story image