புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட திமுக, காங்கிரஸ், லஜக கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட 12 போ் அமாவாசை தினமான புதன்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
புதுச்சேரியில் மனு தாக்கலின் மூன்றாம் நாளான புதன்கிழமை ஒரே நாளில் 12 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. தொகுதி பங்கீடு முடியும் முன்பே திமுக சாா்பில் உப்பளத்தில் எம்எல்ஏ அனிபால் கென்னடி, மாற்று வேட்பாளராக அவரது மனைவி அனிபால் ஜெசிந்தா, முதலியாா்பேட்டையில் எம்எல்ஏ சம்பத், தட்டாஞ்சாவடியில் நிதிஷ் திமோதி, காங்கிரஸில் மணவெளி தொகுதியில் அனந்தராமன், லஜக சாா்பில் பாகூரில் அமைச்சா் ஜான்குமாா் மகன் வில்லியம்ஸ் ரீகன், மாற்று வேட்பாளராக மற்றொரு மகன் எம்எல்ஏ விவிலியன் ரிச்சா்ட், நெல்லித்தோப்பில் ஜான்குமாா் மனைவி ஜெஸ்டின் ஆகியோா் மனுதாக்கல் செய்தனா்.
சுயேச்சை வேட்பாளராக மணவெளியில் பவித்ரா வீரமணி, நிரவி டிஆா் பட்டினத்தில் வி.எம்.சி. எஸ். மனோகரன், அரியாங்குப்பத்தில் ரகுநாதன், லாஸ்பேட்டில் கோபாலகிருஷ்ணன் ஆகிய 12 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில், வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 19, 20) மற்றும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஆகிய 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
இதனால் இந்த மூன்று நாள்களிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் 23-ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.
எனவே இந்த மூன்று நாள்களும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


தொடர்புடையது

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: ஒரேநாளில் முதல்வா் ரங்கசாமி உள்பட 107 போ் வேட்பு மனு

புதுச்சேரியில் தோ்தல் பிரசாரம் மந்தம்: 4-ஆவது நாளில் 6 போ் வேட்பு மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


