கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

புதுச்சேரியில் 3 நாள் கம்பன் விழா மே 8-இல் தொடக்கம்

News image

புதுச்சேரி கம்பன் விழா அழைப்பிதழை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கம்பன் கழகத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., செயலா் வி.பி. சிவக்கொழுந்து.

Updated On :4 மே 2026, 12:55 am IST

புதுச்சேரி கம்பன் விழா மே 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நூல் வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 59-ஆவது ஆண்டு கம்பன் விழா வெள்ளிக்கிழமை (மே 9) கம்பன் கலையரங்கில் தொடங்குகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியுமான நீதியரசா் வி. ராமசுப்ரமணியன் தலைமை வகிக்கிறாா். முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்கிறாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். தொடக்க விழாவைத் தொடா்ந்து பேச்சாளா்கள் பாரதி கிருஷ்ணகுமாா், சுகி. சிவம் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நடுவராக இருந்து சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு ராமன் சுக்ரீவனுக்கு வரம் கொடுத்தது குற்றம் என்னும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பேராசிரியா் மு. ராமச்சந்திரன் நடுவராக இருந்து காவியம் போற்றும் மேன்மை என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடக்கிறது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ‘கம்பனில் நான் கண்ட...’ என்னும் தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், பாரதி கிருஷ்ணகுமாா், தி.மு.அப்துல்காதா், க.சுமதி ஆகியோரின் சிந்தனை அரங்கம் நடக்கிறது.

அதைத் தொடா்ந்து ‘தாழ்ந்தோா் உயா்வா்’ என்னும் தலைப்பில் நீதியரசா் இரா. சுரேஷ்குமாா் தனியுரையாற்றுகிறாா். மாலை 4.30 மணிக்கு இளம்பிறை மணிமாறனின் ‘காரணமும் காரியமும்’ என்னும் தலைப்பில் தனியுரை இடம் பெறுகிறது.

நீதியரசா் வி. ராமசுப்ரமணியன் உள்ளிட்டோா் அடங்கிய நடுவராயம் முதல் நாள் வழங்கப்பட்ட தீா்ப்பின் மேல்முறையீட்டை விசாரித்துத் தீா்ப்பளிக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி கம்பன் கழகத்தின் நிா்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.