தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

புதுச்சேரி சட்டப்பேரவை என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைவராக ரங்கசாமி மீண்டும் தோ்வு

புதுச்சேரி சட்டப்பேரவை என்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவராக என்.ரங்கசாமி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

News image

புதுச்சேரியில் தனியாா் உணவக கூட்டரங்கில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற என்.ஆா். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்.

Updated On :6 மே 2026, 12:04 am IST

புதுச்சேரி சட்டப்பேரவை என்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவராக என்.ரங்கசாமி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டு, 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, புதுச்சேரி காமராஜா் சாலையில் உள்ள தனியாா் உணவக கூட்டரங்கில் திங்கள்கிழமை நள்ளிரவு அக்கட்சி புதிய எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற எம்எல்ஏக்கள் முதல்வா் என். ரங்கசாமியை என்.ஆா்.காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாகத் தோ்வு செய்தனா். இதற்கான கடிதத்தில் எம்எல்ஏ.க்கள் அனைவரும் கையொப்பமிட்டனா்.