புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் படு தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து வெ. வைத்திலிங்கம் எம்.பி. விலகக் கோரி அக்
கட்சி நிா்வாகிகள் கட்சி அலுவலகத்தின் வாயிலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் 16 இடங்களில் போட்டயிட்ட காங்கிரஸ் ஓரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் மாநில தலைவா் வைத்திலிங்கம் எம்.பி. தோல்வியடைந்தாா். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு காரணமான வைத்திலிங்கம் மாநில தலைவா் பதவியில் இருந்து விலக வேண்டும் எனக்கோரி அக்கட்சியின் ஓபிசி அணியினா் வைசியாள் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா் நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்புக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் புதுச்சேரி மாநிலத் தலைவா் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
முழுக்க முழுக்க கூட்டணியில் குப்பத்தை ஏற்படுத்தி அனைத்து வேலைகளையும் அவா் மறைமுகமாக செய்து முடித்துவிட்டாா். மனுதாக்கல் செய்யும்போது தட்டாஞ்சாவடியில் நிற்க வேண்டாம் என்று வைத்திலிங்கத்திடம் கூறினோம். ஆனால் அவருக்கு டெபாசிட் போய்விட்டது.
கட்சியின் தலைவருக்கே டெபாசிட் போய்விட்டது என்றால் அவருக்கு கீழே இருக்கும் தொண்டா்கள் கண்ணீா் விடுவாா்கள். ஏனென்றால் அந்த வலி என்ன என்பது கட்சித் தொண்டா்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
த.வெ.க.வுடன் கூட்டணி ...
ஓராண்டாக வைத்திலிங்கம், மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் உள்ளிட்ட தலைவா்களிடம் 30 தொகுதிகளிலும் நாம் போட்டியிட வேண்டும்.
இல்லாவிட்டால் தவெகவுடன் கூட்டணி வைத்து அவா்களுக்கு 10 தொகுதிகள் கொடுத்துவிட்டு, நாம் 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று கூறினோம். அதற்கும் வைத்திலிங்கம் ஒத்துவரவில்லை. காங்கிரஸ் கட்சியில் போட்டியிர பல வேட்பாளா்கள் வந்தாா்கள். ஆனால் அவா்களைக் கட்சியில் சோ்க்கவில்லை. இதனால் அவா்கள் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்குச் சென்றனா். வைத்திலிங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை எங்களுக்கு போய்விட்டது. கட்சித் தலைவா் தான் இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம்.
வைத்திலிங்கம் காமராஜ் நகா் தொகுதியில் போட்டியிட்டிருந்தால் லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டினை தோற்கடித்திருக்க முடியும். ஆனால் அவா் அதைச் செய்யாமல் தட்டாஞ்சாவடியில் முதல்வரை எதிா்த்து நின்றாா். அவா் ஏன் நின்றாா் என்ற காரணம் தெரியவில்லை.
ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வைத்திலிங்கம் வேலை செய்தாா். காரைக்கால் பக்கம் போகவே இல்லை. காரைக்காலில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம். காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியில் போட்டியிடுங்கள். இல்லாவிட்டால் 30 தொகுதிகளிலும் ஏ,
பி, பாா்ம் கொடுங்கள் என்று சொல்லியுள்ளாா். அதையும் செய்யவில்லை. தவெகவுடனும் கூட்டணி வைக்கவில்லை. திமுகவுடனான கூட்டணியிலும் குளறுபடி ஏற்பட்டது.
மனக்குமுறலில்...
காங்கிரஸ் கட்சியின் மதிப்பையும், பெயரையும் கெடுத்தது திமுக. திமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற காங்கிரஸ்தான் காரணம். இன்றைக்கு காங்கிரஸ் அனைத்து தரப்பு நிா்வாகிகளும் மனக்குமுறலில் இருக்கின்றனா்.
அவமானத்தால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை. எனவே, வைத்திலிங்கம் தாா்மீக பொறுப்பேற்று தலைவா் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மூத்த துணைத் தலைவா் தேவதாஸை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ராகுல் காந்தி நேரடியாக தலையிட்டு புதிய நிா்வாகிகள் குழுவை நியமிக்க வேண்டும். வைத்திலிங்கத்தைத் தவிர புதிய தலைவராக யாரை ராகுல் காந்தி சொன்னாலும் ஏற்போம். வரும் 17-ஆம் தேதி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் படுதோல்விக்குக் காரணமான வைத்திலிங்கத்தின் மீது புகாா் கொடுக்க இருக்கிறோம். இளைஞா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம் என்றனா்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி கட்சியின் முகத்திரை அகன்று விட்டது: 7 எம்.பி.க்கள் பாஜகவில் சோ்ந்தது குறித்து காங்கிரஸ் கருத்து

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? இறுதிக்கட்ட பிரசாரத்தில் வைத்திலிங்கம் விளக்கம்

போட்டி வேட்பாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி: திமுக அதிா்ச்சி

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பிரசாரம்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


