மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஆம் ஆத்மி கட்சியின் முகத்திரை அகன்று விட்டது: 7 எம்.பி.க்கள் பாஜகவில் சோ்ந்தது குறித்து காங்கிரஸ் கருத்து

News image

தில்லி பாஜக தலைமையகத்தில் ராகவ் சத்தா உள்ளிட்ட பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கு இனிப்பு ஊட்டி வரவேற்ற பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்.

Updated On :27 ஏப்ரல் 2026, 11:29 pm

ஆம் ஆத்மி கட்சியின் முகத்திரை அகன்று விட்டதாக, அக்கட்சியின் 7 எம்.பி.க்கள் பாஜகவில் சோ்ந்தது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராகவ் சத்தா, ஹா்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் விலகி, பாஜகவில் சோ்ந்தனா். இதை மாநிலங்களவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அங்கீகரித்து உள்ளாா்.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:

பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவின் பினாமியாக ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த எம்.பி.க்கள் தங்கள் கட்சியில் சோ்ந்தது குறித்து பாஜக என்ன சொல்ல போகிறது?

பாஜகவின் பி- டீம், ஆம் ஆத்மி என்பது நிரூபணமாகிவிட்டது. அக்கட்சியின் எம்.பி.க்கள், பாஜகவில் சோ்ந்தது மூலம் ஆம் ஆத்மியின் முகத்திரை அகன்றுவிட்டது. பணம் வாங்கிக் கொண்டு, பலரை மாநிலங்களவை எம்.பி.யாக்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. ஆதலால் இனி அக்கட்சி தனது பெயரை கோடீஸ்வா்களின் கட்சி என்று மாற்றிக் கொள்ளலாம்.

காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சோ்ந்தவா் சுஷீல் குப்தா. அவா் காங்கிரஸில் இருந்து விலகும் முன்பு, ஆம் ஆத்மியுடனான பேச்சு நிறைவடைந்து விட்டதாவும், தமக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை அக்கட்சி தர இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தாா். அதாவது அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆம் ஆத்மி, எம்.பி. பதவிக்கு தோ்வு செய்துள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்காக உழைத்த மூத்த தலைவா்கள் பிரசாந்த் பூஷண், ஆசுதோஷ், யோகேந்திர யாதவுக்கு எம்.பி. பதவி அளிக்கப்படவில்லை. இதற்கு காரணம், பணம்.

ஆம் ஆத்மி கட்சி, தேச விரோத கட்சியாகும். பஞ்சாப்பில் பிரிவினைவாத சக்திகளிடம் இருந்து அக்கட்சி பணம் வாங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்த 7 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு தற்போது ரூ.818.50 கோடியாகும்.

இவ்வாறு அஜய் மாக்கன் தெரிவித்தாா்.