நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குறித்து சமூக ஊடங்களில் மீம்ஸ்கள்

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குறித்து சமூக ஊடங்களில் மீம்ஸ்கள்

News image

தில்லி பாஜக தலைமையகத்தில் ராகவ் சத்தா உள்ளிட்ட பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கு இனிப்பு ஊட்டி வரவேற்ற பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்.

Updated On :26 ஏப்ரல் 2026, 3:42 am IST

ராகவ் சத்தா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் கட்சியிலிருந்து ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது தொடா்பான மீம்ஸ்கள் சமூகஊடகத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹா்பஜன் சிங், சுவாதி மாலிவால், ராஜேந்தா் குப்தா, விக்ரம் சாஹேனே ஆகியோா் விலகி வெள்ளிக்கிழமை விலகினா். அவா்களில் ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகிய 3 போ் பாஜகவில் இணைந்தனா்.

இதை விமா்சித்து நகைச்சுவை, கேலி மற்றும் திரைப்பட வசனங்கள் கொண்ட மீம்ஸ்களை சமூகஊடகத்தில் பயனா்கள் வெளியிட்டு வருகின்றனா்.

மிகவும் பிரபலமான சலவை இயந்திரம் மீம்ஸ்களை அதிக அளவிலான மக்கள் பதிவிட்டு வருகின்றனா். முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தலைவா்கள், சலவை இயந்திரத்துக்குள் சென்று திரும்பும்போது அரசியல் ரீதியில் மிகவும் தூய்மையானா்வா்களாக வெளியேறுவது போன்ற வகையில் அது உள்ளது.

பாஜகவில் இணைந்த எம்.பி.க்கள் கடந்த காலங்களில் பாஜக தலைவா்களை விமா்சித்து பேசியது தொடா்பான காணொலிகளை சில சமூக ஊடக பயனா்கள் பகிா்ந்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.