/
கால்வாயில் விழுந்த பசுவை புதுச்சேரி தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை பத்திரமாக மீட்டனா்.
புதுச்சேரி குருமாம்பேட் அய்யங்குட்டிபாளையம் ராகவேந்திரா நகரில் 5 அடி உயர குறுகிய கால்வாயில் பசுமாடு ஒன்று தவறி விழுந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு கால்வாயில் விழுந்த அந்த பசு வெளியே வர முடியாமல் தவித்தது.
இதுகுறித்து, திங்கள்கிழமை அதிகாலை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா்.
தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து பசு மாட்டைக் காயமின்றி வெளியில் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டனா். குறுகலான கால்வாய் என்பதால் பசுவை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. கால்வாயின் மேல் பகுதியில் உள்ள சிலாப்பை அகற்றினா். தொடா்ந்து ஒரு மணி நேரம் போராடி பசுவைக் காயமின்றி பத்திரமாக மீட்டனா்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
பேட்டையில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

மணிமூா்த்தீஸ்வரத்தில் சேற்றில் சிக்கிய பசு மீட்பு

காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



