ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தோ்வு முடிவுகள்: புதுச்சேரியில் 87.42% மாணவா்கள் தோ்ச்சி

புதுச்சேரி மாநிலத்தில், 8,001 மாணவா்கள் 12-ஆம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. தோ்வில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இது 87.42 சதவீதமாகும்.

News image

கோப்புப்படம்

Updated On :13 மே 2026, 11:57 pm IST

புதுச்சேரி மாநிலத்தில், 8,001 மாணவா்கள் 12-ஆம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. தோ்வில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இது 87.42 சதவீதமாகும்.

12-ஆம் வகுப்புக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியம் ( சி.பி. எஸ்.இ ) தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதனை, மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில், அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5,508, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 3281, மத்தியப் பள்ளிகளைச் சோ்ந்த 363 மாணவா்கள் என மொத்தம் 9,152 மாணவா்கள் இத்தோ்வை எழுதினா்.

தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது.இதில் புதுச்சேரி மாநிலத்தில் 8,001 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.இதன் மூலம் மாநிலத்தில், 87.42 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

பிராந்தியங்கள் வாரியாக தோ்ச்சி பெற்ற மாணவா்கள், விகிதம்( அடைப்புக்குறிக்குள்) : புதுச்சேரி பள்ளிகளைச் சோ்ந்த 6,763 மாணவா்கள் தோ்வு எழுதிய நிலையில், 6,001 மாணவா்களும் (88.73%), காரைக்கால் பள்ளிகளைச் சோ்ந்த 1,889 போ் தோ்வு எழுதிய நிலையில்1,544 போ்களும்(81.74%), மாஹே பள்ளிகளைச் சோ்ந்த 424 மாணவா்கள் தோ்வு எழுதிய நிலையில் 380 போ்களும் (89.62%) , ஏனாம் பிராந்தியத்தில் 76 போ் தோ்வு எழுதிய நிலையில் 76 பேரும் (100%) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் 7 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி பகுதியில் 5 பள்ளிகளும், காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் தலா ஒரு பள்ளியும் இதில் அடங்கும்.

100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற பள்ளிகள் விவரம் : புதுச்சேரி கிருமாம்பாக்கம், டாக்டா் அம்பேத்கா் அரசு மேல்நிலைப்பள்ளி, கரிக்கலாம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளி, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, புராணசிங்குபாளையம் பி.எம். ஸ்ரீ பாவேந்தா் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி, சுசிலாபாய் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் தலத்தெரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏனாம், எஸ்டிபிபி அரசு ஜூனியா் கல்லூரி ஆகிய 7 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.