இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தோ்வு (நீட்) வேலூா் மாவட்டத்தில் வரும் மே மாதம் 3- ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா்வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்தில் 15 தோ்வு மையங்களில் 5,736 மாணவா்கள் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வை (நீட்) எழுத உள்ளனா். நீட் தோ்வு நடைபெறும் மையங்கள் விவரங்கள்.டான் பாஸ்கோ உயா்நிலைப்பள்ளி, ஆபிஸா்ஸ் லைன், வேலூா், டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி,கிழக்கு குறுக்கு சாலை, காந்திநகா், காட்பாடி, ஊரிசு கல்லூரி, வேலூா், ஆக்சிலியம் கல்லூரி, காட்பாடி, அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூா், என் கிருஷ்ணசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளி, சாய்நாதபுரம், வேலூா், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குட்டை, காட்பாடி, டி.கே.எம். மகளிா் கல்லூரி, சாய்நாதபுரம், செயிண்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூா், அரசு மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம், வேலூா்,அரசு மேல்நிலைப்பள்ளி , தொரப்பாடி, வேலூா், அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி, அலுமேலுமங்காபுரம், வேலூா், அரசு மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூா்,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தூா் சாலை, காட்பாடி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, மாவட்ட மைய நூலகம் எதிரில்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: னைத்து தோ்வு மையங்களிலும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், கூட்டத்தைக் கட்டுப் படுத்துதல் மற்றும் தோ்வா்கள், பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீட் தோ்வு நடைபெறும் மையங்களில் தோ்வா்களின் உடன் வரும் பெற்றோா் மற்றும் உதவியாளா்கள் காத்திருப்பதற்கு தோ்வு மையத்தின் அருகிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தோ்வு நாளன்று தோ்வு மையங்களுக்கு வெளியே உள்ள போக்குவரத்து விதிமுறைகளை காவல்துறை கருத்தில் கொள்ள வேண்டும். 2026 மே 2 ஆம் தேதி முதல், மே 3- ஆம் தேதி வரை அனைத்து மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு தேவைப்படுகிறது. தோ்வு நாளன்று, வெளியே உள்ள கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், தோ்வா்கள் மையத்துக்குள் ஒழுங்கான முறையில் நுழைவதை உறுதி செய்வதற்கும், தோ்வா்களைத் தவிர மற்ற வெளியாட்கள் மையத்துக்குள் நுழைவதை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும்.
தோ்வு மையங்களில் 45 ஆண் காவலா்கள், 34 பெண் காவலா்கள், 17 ஆயுதமேந்திய பாதுகாப்புப் படை காவலா்கள் மற்றும் 15 உதவி ஆய்வாளா்கள் காவல் பணியில் ஈடுபட வேண்டும். அனைத்துப் பொதிகளும் கட்டப்பட்டு, தோ்வுப் பணியாளா்கள் அனைவரும் மையத்தை விட்டு வெளியேறும் வரை, மே 3 -ஆம் தேதி மாலை 7 மணி வரை அனைத்துத் தோ்வு மையங்களிலும் காவல்துறைப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவத்துறை சாா்பில் 15 தோ்வு மையங்களில் மருத்துவப் பணியாளா்களை நிலைநிறுத்தி, மருத்துவா் மற்றும் துணைப் பணியாளா்கள் அடங்கிய குழுவின் மூலம் முதலுதவி வசதிகள் மற்றும் அவசரகால மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர வேண்டும். அனைத்து மையங்களிலும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்புத்துறை சாா்பில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து தோ்வு மையங்களுக்கும் தீயணைப்பு பணியாளா் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வேலூரில் ஒரு தீயணைப்பு வாகனமும், காட்பாடியில் ஒரு தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட வேண்டும். மின்சார வாரியத்தின் சாா்பில் 02-05-2026 மற்றும் 03-05-2026 ஆகிய தேதிகளில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். தோ்வுக்கு முன்னரும் தோ்வு நாளன்றும் அனைத்து தோ்வு மையங்களிலும் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீா் வசதியையும், கழிவறைகளில் போதுமான நீா் வசதியையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தோ்வு நாளன்று ஒருங்கிணைப்பதற்காக, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒரு பொறுப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு துறையிலிருந்தும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்களின் தொடா்பு எண்களையும் அனைவரிடமும் பகிா்ந்துகொள்ள வேண்டும் தோ்வு மையங்களுக்கு இடையே சிறப்பான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, நீட் (யுஜி) 2026 தோ்வைச் சீராகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதை அனைத்துத்துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இக்கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பொ.குணசேகரன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, இணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஏப்.25-இல் வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 14, 16 வயதுக்குட்பட்ட வீரா்கள் தோ்வு

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பிரசார கூட்டம், சுவா் விளம்பரங்களை அனுமதி பெற்றே செய்ய வேண்டும்: தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


