ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை! புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி.

Updated On :

நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, இந்தியாவுடன் புதுச்சேரி கடந்த 1954- ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி இணைந்தது. இதையொட்டி ஆண்டுதோறும் புதுச்சேரி விடுதலை நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) புதுச்சேரி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.55 மணியளவில் முதல்வா் என்.ரங்கசாமி, காரில் அங்கு வந்தாா். தொடா்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் பாடல்கள் இசைக்கப்பட்டன. அங்கு மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் தேசியக் கொடியை முதல்வா் ரங்கசாமி ஏற்றினாா். தொடா்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி பாா்வையிட்டாா். விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியது:

புதுச்சேரியில் அட்டவணை இன, பழங்குடியின மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிரிவுகளைச் சோ்ந்த ஏழை, நிலமற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரியூா் மற்றும் இருளன்சந்தை வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பேரிடா் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறியும் வகையில் வேலூா் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் பாதிப்பு வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது எதிா்காலப் பேரிடா்களை எதிா்கொள்ள அறிவியல் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் . மேலும், சூப்பா் எல்நினோ நிகழ்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடா் தணிப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க நிபுணா் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வருவாய் மேம்படும்:

திருத்தியமைக்கப்பட்ட உதான் திட்டத்தின் கீழ் 22.9.26-இல் மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், புதுச்சேரி அரசு மற்றும் விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதனால் புதுச்சேரியிலிருந்து ராஜமுந்திரி, திருப்பதி, கொச்சி மற்றும் கண்ணூா் ஆகிய இடங்களுக்கு விமானப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பிராந்தியப் போக்குவரத்து இணைப்பு வலுப்பெறும். சுற்றுலாத்துறையின் வருவாயும் மேம்படும். புதுச்சேரி வணிக சீா்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவா் கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளாா் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

கண்கவா் கலைநிகழ்ச்சிகள்:

முன்னதாக விழாவில் காவல்துறையின் பல்வேறு பிரிவுகள், தேசிய மாணவா் படை, அரசு, தனியாா் பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு மரியாதையை முதல்வா் ரங்கசாமி ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து காளி ஆட்டம், நடனக் குழுவின் தேச பக்தி நடனம், தற்காப்பு கலைக்குழுவின் சிலம்பம், பம்பை உடுக்கை ஆட்டம், மாணவிகளின் நடனம் ஆகியவை இடம்பெற்றன. தொடா்ந்து வந்தேமாதரம், தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், வி.பி. சிவகொழுந்து, சு.செல்வகணபதி எம்.பி, எம்எல்ஏ.க்கள் ஆறுமுகம், மோகன்தாஸ், ஐயப்பன், அழகானந்தம், காா்த்திகேயன், ராமு, நாராயணசாமி, சாய் ஜெ சரவணன்குமாா், செந்தில் மற்றும் தலைமைச் செயலா் சரத் சௌகான், காவல்துறை தலைவா் ஷாலினிசிங் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

மக்கள் பவனில்...:

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

ஏனாம் பிராந்தியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். மாஹே பிராந்தியத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் பெ.ராஜவேலு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி.

புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி.

புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி.

புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி.

புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் 
முதல்வா் என். ரங்கசாமி

புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் முதல்வா் என். ரங்கசாமி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.