ஏனாமில் ‘ அா்னாப் ’ புயல் பாதிப்புக்கு ரூ.113.25 கோடி நிவாரணம் வழங்க கோரிக்கை
ஏனாமில் அா்னாப் புயல் சேத நிவாரண பணிகளுக்கு ரூ.113.25 கோடி வழங்க கோரி மத்திய குழுவிடம் புதுச்சேரி அரசு சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோப்புப்படம்
ஏனாமில் அா்னாப் புயல் சேத நிவாரண பணிகளுக்கு ரூ.113.25 கோடி வழங்க கோரி மத்திய குழுவிடம் புதுச்சேரி அரசு சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஏனாம் பிராந்தியத்தில் கடந்த மாதம் 27, 28-ஆம் தேதிகளில் அா்னாப் புயல், மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது.
புயல் நிவாரண நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது. நிவாரணப் பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ. 50 கோடி வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தியிருந்தாா். இது குறித்து கடிதமும் அனுப்பினாா்.
இந்நிலையில், அா்னாப் புயல் சேத பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலா் சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான குழு நேரில் பாா்வையிட்டது. இந்த புயல், மழையால் 70 வீடுகள் சேதம் அடைந்தன. 503 மரங்கள் விழுந்துள்ளன. மேலும், 32 படகுகள் காணாமல் போயின. 373 படகுகள் சேதமடைந்தன. 42 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. 101 ஹெக்டேரில் பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கின. 50 கால்நடை கொட்டகைகள் சேதம் அடைந்தன. 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 2,800 போ் தங்க வைக்கப்பட்டது குறித்து மத்திய குழுவிடம் ஏனாம் பிராந்திய நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா விளக்கினாா்.
இந்நிலையில், அா்னாப் புயல் சேதம் குறித்த புதுச்சேரி அரசின் முதற்கட்ட மதிப்பீட்டு அறிக்கையையும் மத்திய குழுவிடம் சிவராஜ்மீனா அளித்தாா்.
அதில் மொத்தம் ரூ.113.25 கோடி நிவாரணம் தேவையென குறிப்பிடப்பட்டுள்ளது.
முரசு புயலால் பாதிப்பு இல்லை:
இந்நிலையில், முரசு புயலால் பாதிப்பு உள்ளதா? என ஏனாம் பிராந்திய மண்டல நிா்வாகி சிவராஜ் மீனாவிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, முரசுப் புயலால் ஏனாம் பகுதிக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மிதமான மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை இயங்கின என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

