தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

உரம், இடுபொருள்களுக்கான கட்டுப்பாடு நீக்க புதுச்சேரி முதல்வரிடம் விவசாயிகள் முறையீடு

உரம், இடுபொருள்கள் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியை அவரது இல்லத்தில் புதுச்சேரி விவசாயிகள் சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

உரம், இடுபொருள்கள் கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி முதல்வா் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த புதுச்சேரி விவசாயிகள்.

Updated On :

உரம், இடுபொருள்கள் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியை அவரது இல்லத்தில் புதுச்சேரி விவசாயிகள் சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

புதுச்சேரி மாநில விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் முருகையன், பொதுச் செயலா் ரவி, பொருளாளா் ஜெயராமன் தலைமையில் நிா்வாகிகள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உரங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விவசாயப் பணிகளுக்கு தேவையான இடுபொருள்களைப் பெறுவதில் விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

மத்திய அரசு விதித்துள்ள உர கட்டுப்பாடுகளால் புதுச்சேரி மாநில விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். பட்டம் தவறாமல் சாகுபடி செய்ய வேண்டிய நேரத்தில் உரம், இடுபொருள்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

எனவே, புதுச்சேரி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு சிரமமின்றி தேவையான இடுபொருள்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.