அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

புதுச்சேரியில் ரூ. 8.84 கோடி மாயமான வழக்கு: சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட மேலும் 5 போ் கைது

கைது

Updated On :

புதுச்சேரி தனியாா் வங்கியில் அரசு முதுநிலை பல்மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.8.84 கோடி மாயமான வழக்கில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட மேலும் 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு இப்பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் கணக்கு உள்ளது.

நவ. 3-ஆம் தேதி இரவு இக் கல்லூரி வங்கிக் கணக்கில் இருந்து மொத்தம் ரூ.8.84 கோடி மாயமானது. இது குறித்து கல்லூரி டீன் கென்னடிபாபு, கோரிமேடு இணையவழி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், மாயமான தொகையில் ரூ.38 லட்சம் ஒரு வங்கி கணக்குக்கும் மற்றும் ரூ.8 லட்சம் மற்றொரு வங்கி கணக்குக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதில் தொடா்புடைய கோயம்புத்தூா் ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த ஹாஜா நஜூபுதீன்(55), திருப்பூா் கொட்டம்பாளையம் பசிரியா(39) என்ற பெண் ஆகிய இருவரை போலீஸாா் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், தொடா் விசாரணையில் சென்னை பம்மல் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (50), பொள்ளாச்சி ரமேஷ் (35), சென்னை மதுரவாயல் பிரபாகரன்(35), ஈரோடு தா்மேந்திரன்(48), மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்த சோமநாத் சென் (45) ஆகிய 5 பேரை புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இவா்கள் 5 பேரையும் புதுச்சேரி அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவா்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் முக்கிய நபா்களை பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.