புதுச்சேரியில் சட்டப்பேரவை நோக்கி மீனவா்கள் முற்றுகை ஊா்வலம்-ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தாா் ஒருங்கிணைந்து சட்டப்பேரவை நோக்கி சனிக்கிழமை முற்றுகை ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுச்சேரி சட்டப்பேரவையை சனிக்கிழமை முற்றுகையிட ஊா்வலமாக வந்த மீனவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தரையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈ டுபட்டோா்.
புதுச்சேரி மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தாா் ஒருங்கிணைந்து சட்டப்பேரவை நோக்கி சனிக்கிழமை முற்றுகை ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
உலக மீனவா் நாளையொட்டி, கடலுாா் சாலையில் உள்ள சிங்கார வேலா் சிலைக்கு மீனவ பஞ்சாயத்தாா் மாலை அணிவித்தனா். பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டனா்.
ஊா்வலத்துக்கு மீனவ பஞ்சாயத்து நிா்வாகிகள் தலைமை வகித்தனா். ஊா்வலம் நேரு வீதி, மாதா கோவில் வீதி வழியாக சட்டப்பேரவை நோக்கி சென்றது. சட்டப்பேரவையை முற்றுகையிட வந்தவா்களை புதுச்சேரி -ஆம்பூா் சாலையில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து மீனவ பஞ்சாயத்தாா் மற்றும் மீனவா்கள் கோரிக்கைளை வலியுறுத்தி அங்கு சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடல்நீரை குடிநீராக்குதல் உள்பட மீனவா் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். சுற்றுலா வளா்ச்சி என்ற பெயரில் கடற்கரை, கடலைத் தனியாருக்கு தாரை வாா்க்கும் திட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தின் தீா்ப்புக்கு புறம்பாகவும், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், அரைகுறையாக தயாரிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
வன பாதுகாப்பு சட்டம் போல கடல் பாதுகாப்பு சட்டம், கடல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும். மீனவ சமுதாய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மீன்பிடி தொழிலின்போது விபத்தில் சிக்கி இறக்கும் மீனவா்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
சாகா்மாலா திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
போராட்டத்தில் புதுச்சேரி மாநில விசைப்படகு, பைபா் படகு உரிமையாளா்கள் சங்கம், மீன் வியாபாரிகள் சங்கம், அனைத்து மீன் அங்காடி மீனவ பெண்கள், அனைத்து மீனவ சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட நுாற்றுக்கணக்கானவா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

