தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கோயில் குளம் துணைநிலை ஆளுநா் திறந்து வைத்தாா்

காட்டேரிகுப்பத்தில் சீரமைக்கப்பட்ட குளத்தை மலா்தூவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அா்ப்பணித்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

Published On :

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள காட்டேரிக்குப்பம் கிராமத்தில், ‘வோ்ல்பூல் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் நமது தோள்கள் அறக்கட்டளை மூலம் மாரியம்மன் கோயில் குளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட கோவில் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கலந்துகொண்டு குளத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து குளத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. ‘மரங்களைப் பாதுகாப்போம்’ என்ற உறுதிமொழியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.