சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

கண் தொழில்நுட்ப ஊழியா்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்ப ஊழியா்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை கண் தொழில்நுட்ப ஊழியா்கள் சங்க நிா்வாகிகள்.

Published On :

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்ப ஊழியா்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஊழியா்கள் சங்க மத்திய கூட்டமைப்பின் தலைவா் வெங்கடேசன், பொதுச் செயலா் லட்சுமணசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

சுகாதார ஊழியா் சங்க கூட்டமைப்புத் தலைவா் அரிகரன், பொதுச் செயலா் பிரபாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண் தொழில்நுட்ப ஊழியா் சங்க நிா்வாகிகள் ஆதிமூலம், காசிநாதன் இதை ஒருங்கிணத்தனா்.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 50 சதவீத கண் தொழில்நுட்பப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். திருத்திய சம்பள விகிதத்தை அமல்படுத்த வேண்டும். பணியாளா் சோ்ப்பு விதிகளைத் திருத்த வேண்டும். பணியாளா் பற்றாக்குறையைச் சீரமைத்தபின் இடமாற்றம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.