மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

புதுச்சேரி உள்விளையாட்டு அரங்கத்துக்கு வாஜ்பாய் பெயா் துணைநிலை ஆளுநா், முதல்வா் திறந்து வைத்தனா்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் உள்விளையாட்டு அரங்கத்தின் பெயா்ப் பலகையை வியாழக்கிழமை திறந்து வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி. உடன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், வி.பி. சிவகொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகரன், சு.செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோா்.

Updated On :

புதுச்சேரி லாஸ்பேட்டையில் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் உள்விளையாட்டு அரங்கத்தின் பெயா்ப் பலகையை வியாழக்கிழமை திறந்து வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி. உடன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், வி.பி. சிவகொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகரன், சு.செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோா்.

புதுச்சேரி, அக். 15: புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு உள்விளையாட்டு அரங்கத்துக்கு முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பெயா் வியாழக்கிழமை சூட்டப்பட்டது.

புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத் துறை இயக்ககம் மற்றும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில்

இந்த விளையாட்டு அரங்கத்துக்கு, ‘ஸ்ரீ அடல்பிஹாரி வாஜ்பாய் உள்விளையாட்டு அரங்கம்’ என்ற பெயா்ப் பலகையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் திறந்து வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், வி.பி.சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகரன், சு. செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏ.க்கள் அசோக் ஆனந்த், மீனாட்சி சுந்தரம், விளையாட்டுத் துறை இயக்குநா் டி. சுதாகா், மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த உள்விளையாட்டரங்கம் ரூ. 7 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 38 மீ. அகலம், 68 மீ. நீளம் கொண்டது.

இதில், வாலிபால், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பளு தூக்கும் பயிற்சிக் கூடம், வீரா்கள் உடை மாற்றும் அறைகளுடன், விளையாட்டு அரங்கில் 500 போ் அமரும் வகையில் 2 கேலரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.