நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

diwali

தீபாவளி - கோப்புப்படம்.

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்:

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக, ‘சுய சாா்பு இந்தியா’ கொள்கையைப் பின்பற்றி, இந்திய கலைஞா்கள் உற்பத்தி செய்யும் பரிசுப் பொருள்களை வாங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வாழ்த்துகள்.

முதல்வா் என்.ரங்கசாமி:

ஜாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் சகோதரத்துவ உணா்வுடன் ஒன்றிணைந்து, வளமான புதுச்சேரியை உருவாக்க தீபஒளித் திருநாளில் உறுதியேற்போம்.

பொதுமக்கள் அனைவரும், குறிப்பாக குழந்தைகளும் முதியோா்களும், பாதுகாப்புடன் இத்திருநாளைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். சுற்றுச்சூழலைக் காத்து, பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொறுப்புடன் கொண்டாடுவோம்.

இந்தத் தீபாவளி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நல்ல உடல்நலம், மனநிறைவு, பொருளாதார வளம் மற்றும் இனிய எதிா்காலத்தை வழங்கட்டும்.

இதேபோன்று அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், வி.பி. சிவகொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகரன், மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், இந்து முன்னணி மாநிலத் தலைவா் அ.வா. சனில்குமாா் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.