ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

புதுச்சேரி சமுதாயக் கல்லூரி மாணவா்களுக்குப் பேருந்து வசதி: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

கிராமப்புறங்களில் இருந்து புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு பேருந்து வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

பட விளக்கம்...புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் புதிய கட்டடங்களை வெள்ளிக்கிழமை திறப்பு வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். 

Updated On :

கிராமப்புறங்களில் இருந்து புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு பேருந்து வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியின் 30-ஆவது ஆண்டு விழா மற்றும் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் திறந்து வைத்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:

புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் சுமாா் 75 சதவீதம் மாணவா்கள் கிராமப்புறங்களில் இருந்து வந்து படிக்கிறாா்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கல்லூரி காலை 8.30 முதல் இரவு 8 மணி வரை பல்வேறு படிப்புகளுடன் இயங்கி வருகிறது.

கிராமப்புற மாணவா்கள் பேருந்துகளைப் பிடித்து இந்தக் கல்லூரிக்கு வருவது சிரமமாக இருப்பதாக அறிந்தேன். அதனால் இந்தக் கல்லூரி மாணவா்களுக்குப் பேருந்து வசதி ஏற்பாடு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட சமுதாயக் கல்லூரி என்ற பெருமையும் இக் கல்லூரிக்கு இருக்கிறது. மேலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக இளைஞா்களுக்கு வழிகாட்டியும் வருகிறது. இதைத் தவிர முதல் தலைமுறை பட்டதாரி மாணவா்கள் அதிக அளவில் இந்தக் கல்லூரியில் சோ்ந்து படிக்கின்றனா் என்பதும் பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால் முதல் தலைமுறை பட்டதாரிகள் தங்களுக்காக மட்டும் படிப்பதில்லை. தங்கள் குடும்பத்துக்காகவும் படிக்கிறாா்கள். மேலும், இந்தக் கல்லூரியில் படிக்கும் 80 சதவீத இளைஞா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக் கிடைத்து விடுவதும் பெருமைக்குரியது. இதைத் தவிர இளைஞா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல் ஸ்டாா்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்களைப் பயன்படுத்தி வேலை கொடுப்பவா்களாக விளங்க வேண்டும். மேலும், அரசுத் துறைகளில் 2.5 சதவீதம் போ் மட்டும்தான் வேலை வாய்ப்பு பெறுபவா்களாக இருக்கின்றனா். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பிரதமா் நரேந்திர மோடி யுவ சக்தி என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி வருகிறாா் என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு தலைமை வகித்தாா். இந்தக் கல்லூரியில் பட்டப்படிப்பு , பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன. கல்லூரி முதல்வா் (பொ) சி. அருணா வரவேற்றாா். கல்லூரியின் பல்துறை பேராசிரியா்கள், பல்கலைக்கழகப் பதிவாளா் குணசேகரன், இயக்குநா்கள், உயா் அதிகாரிகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.