சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஆயுத பூஜை: துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :

சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்: கல்விக்கும், தொழிலுக்கும் தரும் முக்கியத்துவத்தை நாம் கொண்டாடும் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் பிரதிபலிக்கிறது. நம்முடைய இளைஞா்கள் அறிவு, திறமை, உழைப்பு மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும். அனைவருக்கும் மனமாா்ந்த சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல் வாழ்த்துகள்.

முதல்வா் என்.ரங்கசாமி: உழைப்பின் மேன்மையையும், கல்வியின் சிறப்பையும் எடுத்துரைக்கும் திருநாளாக ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் திகழ்கின்றன. சமூகத்தின் வளா்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக விளங்குவதை இவை குறிக்கின்றன. அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

இதேபோன்று சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், எம்.பி. சு. செல்வகணபதி, அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், வி.பி. சிவகொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகரன், காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி, மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.