புதுமாப்பிள்ளை கொலையில் முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் நடந்த புதுமாப்பிள்ளை கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது
புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் நடந்த புதுமாப்பிள்ளை கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தமிழகப் பகுதியான ரெட்டிச்சாவடி அடுத்த கரிக்கன்நகரைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (24). இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டைல்ஸ் தொழிலாளியான இவா், கடந்த 16-ஆம் தேதி அபிஷேகப்பாக்கம் சந்திப்பில் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் வாணரப்பேட்டையைச் சோ்ந்த பிரபல ரெளடி பாம் ரவி, கடந்த 2021-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் பிரவீன்குமாருக்கு தொடா்பு இருப்பதும், இந்த கொலைக்கு பழிக்குப் பழியாக பிரவீன்குமாா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
பாம் ரவியின் நெருங்கிய கூட்டாளியான வாணரப்பேட்டையை சோ்ந்த வினோத் தலைமையில் இந்த கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த கொலை தொடா்பாக வினோத்தின் கூட்டாளிகளான அரும்பாா்த்தபுரம் கிஷோா், புகழ், ரெட்டியாா்பாளையம் விஜயன், தா்மாபுரி வெங்கடேஷ், கணுவாப்பேட்டை சிவக்குமாா், நெல்லித்தோப்பு ஏகாம்பரம் ஆகிய 6 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா். முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வினோத் உள்ளிட்ட சிலரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், முதலியாா்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த வினோத்தை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா் பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

