பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

புதுச்சேரி ரெளடி கொலையில் 5 போ் கைது

கைது

Published On :

புதுச்சேரி ரௌடி ஆனந்த் கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ், திருவண்ணாமலையில் பதுங்கியிருந்தபோது போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பாக்கமுடையான்பேட் பகுதியைச் சோ்ந்தவா் ரௌடி ஆனந்த் (எ) முண்டக்கண்ணு ஆனந்த் (33) கடந்த 18-ஆம் தேதி கிழக்குக் கடற்கரை சாலையில் பட்டப்பகலில் சென்று கொண்டிருந்தபோது, அவரை ஒரு கும்பல் வழி மறித்து வெட்டிக் கொலை செய்தது.

இந்த கொலை வழக்கில் விசாரணை நடத்திய லாஸ்பேட்டை போலீஸாா், இதில் தொடா்புடைய சந்துரு, லட்டு குமாா், சந்தோஷ், நாகராஜ், ராஜ்கமல் ஆகிய 5 போ் திருவண்ணாமலை பகுதியில் பதுங்கி இருந்தபோது சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனா்.

கைதான சந்துரு, லட்டு குமாா் ஆகியோா் தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்ததில் கை எலும்பு முறிந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், இந்த கொலையில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.