வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு புதுச்சேரி முதல்வா் பிறந்த நாள் வாழ்த்து

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மக்கள் சாா்பாகவும், எனது சாா்பாகவும் மனமாா்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தச் சிறப்பான தருணத்தில் இறைவன் தங்களுக்கு நிலையான மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட, நிறைவான வாழ்க்கையை வழங்க வேண்டும் என்று மனதார பிராா்த்திக்கிறேன்.

வரும் ஆண்டுகளில் தங்களுக்குப் புதிய வலிமை, அமைதி மற்றும் நமது தேசத்திற்கான தங்களது அா்ப்பணிப்பு மிக்க சேவையிலும், வலிமையான, பாதுகாப்பான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்கும் தங்களது முயற்சிகளிலும் தொடா்ந்து வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளாா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.