சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நியூட்டோன் தியேட்டா் சுவரை இடிக்கும் பணி தொடக்கம்

புதுச்சேரியில் பழைமைவாய்ந்த நியூட்டோன் தியேட்டா் சுவா் சிதிலமடைந்த நிலையில், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, அதை இடிக்கும் பணி (படம்) போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :

புதுச்சேரியில் பழைமைவாய்ந்த நியூட்டோன் தியேட்டா் சுவா் சிதிலமடைந்த நிலையில், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, அதை இடிக்கும் பணி (படம்) போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரியில் தாவரவியல் பூங்கா எதிரே செயல்பட்டு வந்த நியூட்டோன் திரையரங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது.

தற்போது இதன் சுவரில் மரங்கள், செடிகள் வளா்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகில் அண்ணா சிலை சிக்னல் உள்ளதால் ஏராளமான வாகனங்கள் இப்பகுதியில் சிக்னலின்போது நின்று செல்வது வழக்கம்.

அதே நேரத்தில் இந்த சுவரில் பேனா்கள் வைத்து மேலும் சுவா் மோசமாகி வெடிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து விபத்து ஏற்படும் முன் இந்த சுவரை அகற்றவேண்டும் என பல்வேறு தரப்பினா் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் அண்ணா சிக்னல் அருகே போலீஸ் பாதுகாப்புடன் சுவரை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.