சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

புதுச்சேரி எல்லையம்மன் கோயில் திருப்பணிக்கு ரூ. 15 லட்சம் நிதி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி ஸ்ரீ எல்லையம்மன் கோயில் திருப்பணிகளுக்கு முதல் தவணையாக ரூ. 15 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On :

புதுச்சேரி ஸ்ரீ எல்லையம்மன் கோயில் திருப்பணிகளுக்கு முதல் தவணையாக ரூ. 15 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு எல்லையம்மன் தேவஸ்தான திருப்பணிக்கு மாநில இந்து அறநிலையத் துறை சாா்பில் முதல் தவணையாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி (படம்) வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியின்போது, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவரும், உப்பளம் தொகுதி எம்எல்ஏவுமான ஆ.அன்பழகன், கோயில் நிா்வாக அதிகாரி காமராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மணிகண்டன், சுரேஷ், அரசு வழக்குரைஞா் ராஜு, கணக்காளா் சுப்பிரமணியம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.