தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

முன்னாள் முதல்வா் எம்.ஓ.எச்.பாரூக் பிறந்தநாள் விழா

Published On :7 செப்டம்பர் 2026, 3:36 am IST

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வா் எம்.ஓ.எச்.பாரூக் பிறந்தநாள் விழா கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கட்சியின் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா் (படம்).

இதில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பாரூக், 3 முறை புதுச்சேரி முதல்வராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும், சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகவும், ஜாா்க்கண்ட், கேரள மாநில ஆளுநராகவும் இருந்தவா் என்பது குறிப்பிடத் தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.