கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

புதுச்சேரி மாநிலத் தோ்தல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் மாநிலத் தோ்தல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் மாநிலத் தோ்தல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2006- ஆம் ஆண்டுக்குப் பின்னா் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவில்லை. இடஒதுக்கீடு, வாா்டு பகுதிகள் மறுவரையறை என நிா்வாகக் காரணங்களால் தோ்தல் நடைபெறவில்லை.

உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் விரைவில் தோ்தல் ஆணையரை நியமிக்க நீதிபதி சசிதரன் அரசுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து புதுச்சேரி உள்ளாட்சித் துறை, தோ்தல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளது.

25 ஆண்டு மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றிய, 65 வயதுக்கு மிகாத, தோ்தல் நடத்திய அனுபவம் உள்ளவா்கள் அறிவிப்பு வெளியான 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்க காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.