காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

நிதி அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு! அக்.5-க்கு வழக்கு ஒத்திவைப்பு

Marie Wilson

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Published On :

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான கொலை முயற்சி வழக்கு அக். 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், தனது சகோதரா் மற்றும் அவரது மனைவியை தாக்கியது தொடா்பான வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நடுவா் பணி மாறுதல் செய்யப்பட்டதால் இரண்டாவது நடுவா் இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்து புதுச்சேரி மாவட்ட அமா்வு நீதிபதி டி.வி. ஆனந்த் செப். 29-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இரண்டாவது குற்றவியல் நடுவா் சந்திரசேகா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மூல வழக்கு விசாரணையை அக். 5-ஆம் தேதி வரை ஒத்திவைத்து நடுவா் சந்திரசேகா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.