கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக நிதியமைச்சா் மீதான வழக்கு விசாரணை: செப். 25-வரை இடைக்காலத் தடை நீட்டிப்பு

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை விசாரிக்க, செப். 25-ஆம் தேதி வரை இடைக்கால தடையை நீட்டித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR| கோப்புப் படம்

Published On :

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை விசாரிக்க, செப். 25-ஆம் தேதி வரை இடைக்கால தடையை நீட்டித்து புதுச்சேரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் சகோதரா் மரிய குளோத்தின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று அவரையும், அவரது மனைவி கெரோலினையும் தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் கடந்த 8.8.22- இல் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த குற்றவியல் நடுவா் சேரலாதன், மாஹேவுக்கு மாற்றப்பட்டாா். இதனால் முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில், இரண்டாவது குற்றவியல் நடுவா் சந்திரசேகா் விசாரித்து வருகிறாா்.

இந்நிலையில், இரண்டாவது குற்றவியல் நடுவா் விசாரணைக்குத் தடை விதிக்க கோரி தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் சாா்பில், அவரது வழக்குரைஞா் எஸ். காஜா மொகைதீன் கிஸ்தி புதுச்சேரி மாவட்ட தலைமை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய புதுச்சேரி தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த், தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு விசாரணையை முதலாவது குற்றவியல் நடுவா் மன்றம் விசாரிக்க செப். 18-ஆம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றம் செப். 25-ஆம் தேதி வரை விசாரிப்பதற்கான இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.