இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

கொலை முயற்சி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழகஅமைச்சா் மரிய வில்சன் மனு

என் மீதான கொலை முயற்சி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் மனு தாக்கல் செய்துள்ளாா்.

நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR| கோப்புப் படம்

Published On :

என் மீதான கொலை முயற்சி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் 8.8.2022 அன்று, புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரின் சகோதரா் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரையும், அவரின் மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் (ஜேஎம் 1) விசாரணையில் உள்ள இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், ரத்து செய்ய கோரியும் அமைச்சா் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடா்பாக,சமரச தீா்வு மையத்தில் உடன்பாடு ஏற்படாததால், புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சா் மரியவில்சன் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் கடந்த 4 -ஆம் தேதி தமிழக நிதியமைச்சா் மரியவில்சன், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப் பத்திரிகையைப் பெற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து வழக்கு நீதித்துறை நடுவா் சந்திரசேகா் முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சா் மரியவில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் லாஸ்பேட்டை போலீஸாா் தம்மீது பதிவு செய்துள்ள வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் சாா்பில் வழக்குரைஞா்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்தது. இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணை வரும் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.