கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆ.ஷேக்முசா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கி. திருநாவுக்கரசு, தேசி. செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சு.தண்டபாணி தொடங்கி வைத்தார்.
மாநிலத் தலைவர் வே. மாணிக்கம், ஓய்வு பெற்றோர் பிரிவு பொதுச்செயலாளர் சா. அன்பழகன் ஆகியோர் பேசினர். 6-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் 2006-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வழங்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். 1988-ஆம் ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு பின்பு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டு மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு சிறப்புநிலை வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழாசிரியர் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பகுதி நேர தொழிற்கல்வுõ ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்திட வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஓன்றிய மாநில துணை பொதுச்செயலாளர் த. சேகர், மாவட்டத் தலைவர் எம். தனசேகரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ல. சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்டப் பொருளாளர் ரா.குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.