சர்க்கரை ஆலைக் கரித்துகளால் அவதி: பொதுமக்கள் புகார்
திருக்கோவிலூர் அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து கரித்துகள்கள் அதிகளவில் வெளியேறுவதால் அவதிப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
திருக்கோவிலூர் அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து கரித்துகள்கள் அதிகளவில் வெளியேறுவதால் அவதிப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மூங்கில்துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கரித்துகள்கள் அதிகளவில் வெளியேறுவதால் அண்ணாநகர், காமராஜர் நகர், மோகன் நகர், அங்காளம்மன் நகர், தேவி நகர், அம்பேத்கர் நகர், மோட்டூர், காட்டுக்கொட்டகை, பழையூர் பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
கரித்துகள்கள் காற்றில் பரவி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், குடிநீரில் படிவதால் தண்ணீரை கூட திருப்தியாக பருக முடியாமல் அவதிப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
வாகன ஓட்டிகளின் கண்களிலும் கரித்துகள்கள் விழுவதால் விபத்து சூழல் ஏற்படுகிறது.
இது குறித்து இப்பகுதி மக்கள் ஆலை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

