
தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து தெரிவிப்பேன்
கூட்டணி குறித்து யாருடனும் நான் பேசவில்லை; இதுவரை தனியாகத்தான் இருக்கிறேன். தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து தெரிவிப்பேன் என்று விஜயகாந்த் கூறினார்.
கூட்டணி குறித்து யாருடனும் நான் பேசவில்லை; இதுவரை தனியாகத்தான் இருக்கிறேன். தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து தெரிவிப்பேன் என்று விஜயகாந்த் கூறினார்.
திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.77 கோடி செலவில் நடைபெற்ற பணிகளுக்கான பெயர்ப் பலகைத் திறப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:
ரிஷிவந்தியம் தொகுதியில் என்னால் முடிந்தவரை பணிகளை செய்து முடித்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு பைசாவைக்கூட எடுக்காமல் நிதியை ஒதுக்கியுள்ளேன். நாடாளுமன்றத்தை அதிமுக உறுப்பினர்கள் முடக்கியதால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தமிழக சட்டப்பேரவையை நாங்கள் முடக்கினால் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்து விட்டால் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்படுபவன் நான் இல்லை. இதுவரை நான் தனியாகத்தான் இருக்கிறேன். தெளிவாகவும், தைரியமாகவும் இருக்கிறேன். யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை, பணமும் வாங்கவில்லை. நான் சொல்வதுதான் வேதவாக்கு. மற்றவர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து தொண்டர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து பகிரங்கமாக அறிவிப்பேன் என்றார் விஜயகாந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






