ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பயிலரங்கம் தொடக்கம்

விழுப்புரத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதன்கிழமை தமிழ் வளர்ச்சி குறித்த பயிலரங்கம் தொடங்கியது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 4:21 am

தினமணி

விழுப்புரத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதன்கிழமை தமிழ் வளர்ச்சி குறித்த பயிலரங்கம் தொடங்கியது.
 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி தலைமை வகித்து, பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
 தமிழ் தொன்மையான மொழி, இனிமையான மொழி, தொடர்ச்சியாக நீண்ட காலப் பயன்பாட்டில் இருக்கின்ற மொழியாக உள்ளது. இவ்வளவு சிறப்பு மிகுந்த மொழியை நாம் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மொழி வளரும். அதற்கு நாம் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என்றார்.
 இந்தப் பயிலரங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ப.அன்புச்செழியன் ஆட்சி மொழி வரலாறு சட்டம் என்ற தலைப்பிலும், தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் க.சிவசாமி அலுவலகக் குறிப்புகள் வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் என்ற தலைப்பிலும், வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் தா.லலிதா ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்பிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் துரை.தம்புசாமி ஆட்சி மொழிச் செயலாக்கம் அரசாணைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
 இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முற்பகல் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் புலவர்.வெற்றியழகனும், மொழி பெயர்ப்பு கலைச் சொல்லாக்கம் என்ற தலைப்பில் திண்டுக்கல் மா.தமிழ்ப்பெரியசாமியும் உரையாற்றுகின்றனர்.
 அம்மா மென்பொருள் தமிழ்ச் சொல்லாளர் என்ற குறுந்தகடு குறித்து பேராசிரியர் தெய்வசுந்தரம் செயல்முறை விளக்கமளிக்கிறார். பிற்பகல் நடைபெறும் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையுரையாற்றுகிறார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் திட்ட விளக்கவுரையாற்ற உள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.