யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இருவர் சாவு

சின்னசேலம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 3:48 am

தினமணி

சின்னசேலம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் விடுதலைபுரத்தைச் சேர்ந்தவர்கள் ராஜூ மகன் சின்னப்பன் (22).
 சவுரிமான் மகன் ஆரோக்கியதாஸ் (25), கள்ளக்குறிச்சியை அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் நல்லசேவு (25). உறவினர்களான இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் சின்னசேலம் நோக்கி புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனர்.
 இரு சக்கர வாகனத்தை நல்லசேவு ஓட்டினார்.
 எதிரே சின்னசேலத்திலிருந்து நைனார்பாளையம் நோக்கி சின்னசேலம் போயர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தேவராஜ் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இவ்விரு இரு சக்கர வாகனங்களும் நைனார்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் தனியார் பொறியியல் கல்லூரி அருகில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் நல்லசேவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சின்னப்பன், தேவராஜ், ஆரோக்கியதாஸ் ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
 அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 அங்கு தேவராஜ் வியாழக்கிழமை உயிரிழந்தார். சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.