முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

செஞ்சி அருகே பழங்கால பீரங்கி கண்டெடுப்பு

செஞ்சி வட்டம், பென்னகர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கி கண்டெடுக்கப்பட்டது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:55 am IST

செஞ்சி வட்டம், பென்னகர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கி கண்டெடுக்கப்பட்டது.
செஞ்சியில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையோரம் 1.5 மீட்டர் நீளமும், 70 செ.மீ. சுற்றளவும் கொண்ட பீரங்கி கண்டெடுக்கப்பட்டது. இந்த இடம் வெள்ளைக்காரன் திட்டு எனவும், 5 தலைமுறைகளாக இந்த பீரங்கி இங்கேயேதான் உள்ளதென்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொல்லியல் அறிஞர் பெ.லெனின், தலைமை ஆசிரியர் நா.முனுசாமி ஆகியோர் கூறியதாவது: வந்தவாசி போரில் ஆங்கிலேயர்களோ அல்லது பிரெஞ்சுக்காரர்களோ இந்த பீரங்கியைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். மேலும், செஞ்சிக்கோட்டைப் போரில், ராஜாதேசிங்குக்கு எதிராக ஆர்க்காட்டு நவாப்பின் படைகளும் இந்தப் பீரங்கியைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. 
இந்தப் பீரங்கியைத் தொல்லியல் துறையினர் கைப்பற்றி, ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.