சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

காவிரி பிரச்னையில் தேசிய கட்சிகள் நாடகம்: செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு

காவிரி பிரச்னையில் தேசிய கட்சிகள் நாடகமாடுகின்றன என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் குற்றம்சாட்டினார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:52 am

காவிரி பிரச்னையில் தேசிய கட்சிகள் நாடகமாடுகின்றன என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் குற்றம்சாட்டினார்.
விழுப்புரத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி பிரச்னை 150 ஆண்டுகளாக நிலவும் பிரச்னை. இதுதொடர்பான வழக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் உள்ளது. காவிரி நீர் பிரச்னையில் நிரந்தர தீர்வு கிடைக்காது. ஏனெனில், இந்த விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு ஒருவிதமாகவும், தமிழகத்தில் அதே கட்சிகளின் நிலைப்பாடு வேறுவிதமாகவும் உள்ளது. ஆனால், மாநில கட்சிகள் தங்கள் கொள்கையில் ஒரே மாதிரியாக உள்ளன. 
காவிரி விவகாரத்தில் தேசிய கட்சிகள் நாடகமாடுகின்றன. இந்தியா- வங்கதேசம் இடையேயான நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சிந்து நதி பிரச்னையில் தீர்வு எட்டப்படுகிறது. ஆனால், காவிரி நதி நீர் பிரச்னையில் மட்டும் தீர்வு காணமுடியவில்லை.
நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும். அப்போதுதான் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்றார் செ.கு.தமிழரசன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.