காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தீபா பேரவையினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரம் ரயிலடியில் தீபா பேரவையினர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திரண்டனர். பின்னர், அவர்கள் ஊர்வலமாக ரயில் நிலையத்துக்குள் சென்றனர். போலீஸார் அவர்களை தடுக்க முயன்றும் முடியவில்லை.
ரயில் நிலையத்தின் 4- ஆவது நடைமேடைக்குச் சென்ற தீபா பேரவையினர் புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வெளியான 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்துவிட்டது.
கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு மத்திய பாஜக அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இழுத்தடிப்பு செய்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று கோஷம் எழுப்பினர்.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் சிவசங்கர் உள்பட 75 பேரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி சான்றிதழ் தயாரித்து அரசுப் பணம் கையாடல்: இருவருக்கு சிறைத் தண்டனை

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் கால பெளத்த, துவாரபாலகா் சிற்பங்கள் கண்டெடுப்பு

பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

