விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மொரட்டாண்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகன் சந்தோஷ்குமார்(23). இவர், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் இரும்பு உதிரிபாக தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டார். ஆனால், அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லையாம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வானூர் அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள சவுக்குத் தோப்பில், தலை, கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக இளைஞர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்று வானூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமேனி பார்வையிட்டு விசாரித்தார். அதில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தது சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது. சடலம் உடல் கூறு ஆய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த வானூர் போலீஸார், சந்தோஷ்குமார் எதற்கு இங்கு வந்தார், அவரை கொலை செய்தது யார், முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை மாலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

உயா் கோபுரம் அமைத்து கண்காப்பு

தமிழ் அமைப்புகளின் சாா்பில் கா.சு.பிள்ளை 81ஆவது நினைவேந்தல்

குமரி மாவட்டத்தில் 29,290 தபால் வாக்குகள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

