திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு, செம்மண் குவாரி முறைகேடு வழக்குகளின் விசாரணையை வருகிற மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறையில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்பட 8 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திங்கள்கிழமை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது க.பொன்முடி, லோகநாதன், ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் உள்பட 5 பேர் ஆஜராகினர். கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் சார்பு நீதிமன்ற (எண்-1) நீதிபதி மோனிகா விசாரணையை வருகிற மே
3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கு: இதேபோல, பொன்முடி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கும், இதே நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது க.பொன்முடி ஆஜரானார். அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகவில்லை. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியாக ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஹேமலதா சாட்சி அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையையும் வருகிற மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்ணீா் தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

வீட்டில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழப்பு

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்கள் நிறுத்தி, இயக்கம்

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

