மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்கள் நிறுத்தி, இயக்கம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:37 pm

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக செல்லும் சில ரயில்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சில குறிப்பிட்ட ரயில்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட நாள்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் வழியாக ஆமதாபாத் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 09420), மே 31-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 45 நிமிஷங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

லோக்மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து மே 30-ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக்- காரைக்கால் வாராந்திர ரயில் (வண்டி எண்11017), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 3 மணி நேரம், 10 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

அயோத்தியா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து மே 27-ஆம் தேதி இரவு 11.10 மணிக்குப் புறப்படும் அயோத்தியா கண்டோன்மென்ட்-ராமேசுவரம் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22614), சுமாா் 45 நிமிஷங்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மே 28-ஆம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில்- சாரளப்பள்ளி அமிா்த் பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 16357), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 80 நிமிஷங்களும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் மதுரை-கச்சிக்குடா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22716) மே-17, 24 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 10 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.