சங்கராபுரத்தில் சமூகப் பல்நோக்கு முன்னேற்ற சங்கத்தின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
சங்கப் பொதுச் செயலர் ப.கற்பகம் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் பி.தமிழரசன், ஐசிஐசிஐ வங்கி சென்னை மண்டல மேலாளர்கள்
சி.ஜி.கிருஷ்ணன், ஈஸ்வர் முருகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார்.
விழாவில் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் அவசியம் ஆகிய தலைப்புகளில் ச.தேவதிருவருள், தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன், ஓவியர் மு.கலைச்செழியன், நல்லாசிரியர் மு.முகமதுஉசேன், வள்ளலார் மன்ற செயலர் இரா.நாராயணன் ஆகியோர் பேசினர்.
சிறந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவியும், சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளர் ந.தனவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


